Reading Time: < 1 minute

மார்க்கம் பகுதியில் இன்று மாலை வேளையில் இடம்பெற்ற, பல்வேறு வாகனங்கள் தொடர்புபட்ட மோசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Ninth Line மற்றும் நெடுஞ்சாலை 7 பகுதியில், இன்று மாலை நான்கு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ள யோர்க் பிராந்திய காவல்துறையினர், இந்த விபத்தில் ஐந்து வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்குண்ட இரண்டு வெவ்வேறு வாகனங்களின் சாரதிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றையவர் உயிராபத்தான நிலையில் உள்ளதாகவும், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்தினை அடுத்து குறித்த அந்த வீதிச் சந்திப்பு பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.