Reading Time: < 1 minute

நேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், வாகனத்தினால் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

Wanless Drive மற்றும் Queen Mary Drive பகுதியில், நேற்று இரவு 8:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தின் போது படுகாயமடைந்த ஆண், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து வி ட்டதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.