Reading Time: < 1 minute

கனடாவில் மாணவிகள் சக மாணவர்களின் பாலியல் தொல்லைகளினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

தொண்டு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 சதவிகித கனேடிய மாணவிகள், சக மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தி பெற்றோர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா முழுவதிலும், 14 முதல் 21 வயதுக்குட்பட்ட, 4000 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.