Reading Time: < 1 minute

நேற்று வியாழக்கிழமை மாலை Whitchurch-Stouffville பகுதியில் கார் ஒன்று மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

19th Avenueவிற்கும் Stouffville வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில், Warden Avenueவில் நேற்று மாலை 5:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை யோர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் செனடைந்தபோது, வாகனம் ஒன்று மரத்தின் மீதி மோதியவாறு காணப்பட்டதாகவும், அதற்குள் சிக்குண்ட நிலையில் காணப்பட்ட இருவரையும் மீட்புப்படையினர் வந்தே வெளியே கொண்டு வந்ததாகவும், வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில் மற்றையவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த வாகனம் மரத்தின் மீது மோதிய சத்தம் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தோருக்கு பலமாக கேட்டதாகவும், எனினும் மோதல் இடம்பெற்ற வேளையில் அதனை யாரும் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவித்தமைக்கான தெளிவான காரணம் கண்டறியப்படாத நிலையில், குறித்த அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.