Reading Time: < 1 minute

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழா நிகழ்வினை முன்னிட்டு கனடாவில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது.

Tamil Business Directory

எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முடிசூட்டு விழா நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த விழாவினை முன்னிட்டு கனடாவிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸுடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கனடாவிற்கு நெருங்கிய நட்புறவு காணப்படுவுதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் மீதும் முடியாட்சி மீதும் கனேடிய மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு இழக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.