Reading Time: < 1 minute

Cherry Beach பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு வெவ்வேறு பாலியல் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய சம்பவம் கடந்த 15ஆம் திகதி Cherry Beachற்கும் Regatta Roadற்கும் இடைப்பட்ட பகுதியில், Martin Goodman Trailஇல் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்தப் பகுதியில் அதிகாலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையே நடந்து சென்றுகொண்டிருந்த பெண்மீது , இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதேபோல இனந்தெரியாத நபரினால் பெண் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதே பகுதியில் கடந்த முதலாம் திகதியும் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் 25 இலிருந்து 30 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் ஐந்து அடி ஏழு அங்குல உயரம் கொண்ட, மண்ணிற ஆண் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த நபர் தொடர்பில் அல்லது இந்தச் சம்பவங்கள் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு விசாரணை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.