Reading Time: < 1 minute

ஹமில்டனின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Reid Avenue பகுதியில் நேற்று இரவு 6:15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே ஆண் ஒருவர் மிக மோசமான காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலிருந்து இருவர் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது, இருவரும் அப்போது முகத்தினை மறைத்தவாறு காணப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.