Reading Time: < 1 minute

ரொரன்ரோவின் வடபகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு வெளியே இன்று காலையில் சடலம் ஒன்றினை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

றிச்மண்ட்ஹில்லில் உள்ள Sixteenth Avenue அரச பாடசாலை வளாகத்தில் இருந்து இன்று காலை 8:30 அளவில் இந்தச் சடலம் மீட்கப்பட்டதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த அந்தப் பாடசாலையில் இன்று வகுப்புகள் இடம்பெற்றதாகவும், மாணவர்களுக்கு சிறப்பு உதவிகளை வழங்க உளவியல் உத்தியோகத்தர்களும், சமூகப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டதாகவும், யோர்க் பிராந்திய பாடாசலைகள் சபை தெரிவித்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த பெயர் விபரங்கள் எவையும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், புதன்கிழமை இரவு அந்தப் பகுதியில் 16 வயதுச் சிறுவர் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.