Reading Time: < 1 minute

நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதசாரி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Business Directory

புதன்கிழமை இரவு 8:30 அளவில், நெடுஞ்சாலை 401இல், Woodstockற்கு கிழக்கே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்தப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அதற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிறிதொரு வாகனம் அவர் மீது மேதிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைககள் பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் தொடர்பிலான பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. சம்பவத்தை நேரில் கண்டோர் அல்லது தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.