Reading Time: < 1 minute

நேற்று இரவு நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில் இருந்து இஸ்லிங்டன் அவனியூவுக்கு வெளியேறும் பகுதியில், நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த அந்த ஆண் செலுத்திச் சென்ற வானம், சரக்கு ஊர்தியின் பின்புறத்தில் மோதுண்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திலிருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்த தகவல்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்த விபத்தினை நேரில் கண்டோர் அல்லது வாகன ஒளிப்பதிவு சாதனத்தில் அது குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.