Reading Time: < 1 minute

இன்று காலை வேளையில் மிசிசாகாவில் இடம்பெற்ற கோரமான வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

Hurontario Street மற்றும் Matheson Boulevard East பகுதியில், இன்று காலை 5:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பாரவூர்தி ஒன்று தொடர்புபட்ட வாகன விபத்து நேர்ந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினரும் அவசர மருத்துவப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கே ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து குறித்த அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.