Reading Time: < 1 minute

ஏப்ரல் மாதத்தில் முதல் 28 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 152 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

இந்தக் காலப்பகுதியில் 23 ஆயிரத்து 459 பேர் இந்தியாவில் இருந்தும், 13 ஆயிரத்து 878 பேர் ரஷ்யாவில் இருந்தும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 64 பேர் லண்டனில் இருந்தும் ஏனையவர்கள் மற்றைய நாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 67 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.