Reading Time: < 1 minute

கனடாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள் வேகமாக அதிகரித்து வருவதாக டொராண்டோ பொாலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamil Business Directory

இந்த புதிய முறைகள் காரணமாக மோசடிகளை கண்டறிவது முன்னைவிட மிகவும் கடினமாகிவிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு குறித்து கேள்விகள் எழுந்தாலும், அதன் உண்மையான தாக்கம் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து தான் தெளிவாகத் தெரியத் தொடங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோசடி முறைகள் மாறவில்லை எனவும் ஆனால் AI பயன்படுத்தப்படுவதால் மோசடிக்காரர்கள் செய்யும் உளவியல் தந்திரங்கள் மிகவும் குறிவைத்ததாகவும் நம்பத்தகுந்ததாகவும் மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காதல் மோசடி (romance scams), போலி அதிகாரி அல்லது வங்கி அதிகாரி போல நடிக்கும் மோசடிகள் போன்றவை இன்னும் தொடர்ந்தாலும், செயற்கை நுண்ணறிவு காரணமாக அவை மிகவும் நம்பத்தகுந்ததாக மாறியுள்ளன எனவும் பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இணையத்தில் கிடைக்கும் தகவல்களை செயற்கை நுண்ணறிவு தொகுத்து மோசடிக்காரர்களுக்கு வழங்குவதால், பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டை எண்களின் கடைசி நான்கு இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் போன்ற தகவல்களையும் அவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது எனவும் எச்சரித்துள்ளனர்.