Reading Time: < 1 minute

ஒட்டாவாவில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தைப் பார்வையிட காத்திருப்போருக்கு, பொது சேவைகள் மற்றும் கொள்முதல் கனடா பிரிவு, அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

Tamil Business Directory

எதிர்வரும் மாத நடுப்பகுதியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தையொட்டிய பகுதியில், பாதை திருத்தும் வேலைகள் இருப்பதால், குறித்த பகுதி சில தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றியுள்ள நடைபாதைக் கற்களுக்கு இடையில் மணல் மற்றும் பாலிமர் கலவையை குழுவினர் மாற்றவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியின் போது, 81 வயதான நினைவுச்சின்னத்தின் கிழக்குப் பகுதியில், இரண்டு கிரானைட் நடைபாதைக் கற்களும் நிறுவப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பணிகள் ஒக்டோபர் 17ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.