Reading Time: < 1 minute

ஸ்கார்பாரோவில் உள்ள சிடர்பிரே கல்லூரியில் துப்பாக்கி சூடு காரணமாக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tamil Business Directory

பாதுகாப்பு காரணமாகவே கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மார்க்கம் வீதி மற்றும் லாரன்ஸ் அவென்யூ கிழக்கு பகுதியில் உள்ள சிடர்பிரே கல்லூரியில், நேற்று (புதன்கிழமை) மதியம் 1:10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த பொலிஸார், குண்டுகள் துளைக்கப்பட்ட காரொன்றினை சம்பவ இடத்தில் கண்டதாகவும், எனினும் இந்த சம்பவத்தினால் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இச்சம்பவம் குறித்து எவரும் கைது செய்யப்படாத நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.