Reading Time: < 1 minute

திருமண நிகழ்வில் புகைப்பட கலைஞருக்கு உணவு , நீராகாரம் கொடுக்காததால் , தான் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் மணமக்கள் கண் முன்னாடியே அழித்து விட்டு, நிகழ்வை விட்டே புகைப்பட கலைஞர் சென்றுள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்காவில் உள்ள பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது நண்பனின் திருமண நிகழ்வினை புகைப்படங்கள் எடுத்து கொடுக்க சம்மதித்துள்ளார்.

அதன் பிரகாரம் திருமண நிகழ்வினை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருந்த போது , அவருக்கு மணமக்கள் குடும்பம் உபசரிப்புக்களை வழங்கவில்லை.

உணவோ , நீராகாரமோ கொடுக்காது, அவரை கண்டுகொள்ளாது இருந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த புகைப்பட கலைஞர் நேரே மணமக்களிடம் சென்று , அது வரை நிகழ்வில் தான் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் அவர்கள் கண் முன்னே அழித்து விட்டு , நிகழ்வை விட்டு வெளியே சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து , அதனை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தமையால் அது வைரலாகியுள்ளது.