Reading Time: < 1 minute

கியூபெக் மாகாணத்தில், தன் அனுமதியின்றி தன் மனைவிக்கு கொரோனா தடுப்பூசி போட்ட செவிலியர் ஒருவரின் முகத்தில் குத்திய கனேடியரை பொலிசார் தேடிவருகிறார்கள்.

Tamil Business Directory

மொன்றியலுக்கு தென்கிழக்கில் 155 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது Sherbrooke நகரம். திங்கட்கிழமையன்று அங்குள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு செவிலியர் ஒரு பெண்ணுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர், அந்த செவிலியரிடம் பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறார்.

தன் அனுமதியின்றி தன் மனைவிக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதால் அவர் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

என்னைக் கேட்காமல் எப்படி என் மனைவிக்கு நீ தடுப்பூசி போடலாம் என கத்திய அவர், அந்த செவிலியரின் முகத்தில் மாறி மாறி சரமாரியாக குத்தியிருக்கிறார்.

குத்து வாங்கிய அந்த 40 வயதுகளிலிருக்கும் அந்த பெண்ணுக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். மூளையிலும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.