டொராண்டோவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் பின்புறத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக Toronto Police Service தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் Queen Street East மற்றும் Pape Avenue சந்திப்பிற்கு அருகிலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றின் பின்புறத்தில் குழந்தை அசைவற்றுக் கிடப்பதாக அவசர அழைப்பு கிடைத்தது.
இதனையடுத்து தீயணைப்புப் படை, அவசர மருத்துவ சேவை மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மயங்கிய நிலையில் இருந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து Scott Bradbury ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மிகுந்த வருத்தத்துடன் குழந்தை உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார்.
தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், குழந்தை எவ்வளவு நேரம் வாகனத்திற்குள் இருந்தது அல்லது உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்து டொராண்டோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.