Reading Time: < 1 minute
Tamil Business Directory
டொரோண்டோ உள்ளடங்கலான தெற்கு ஒண்டாரியோவில், Health Canadaவின் மருத்துவ கஞ்சா திட்டத்தை தவறாக பயன்படுத்தி, போதைப்பொருள் உற்பத்தி இடம்பெற்றுள்ளதாக, யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், சட்டபூர்வமான முறையில் அரச அனுமதியினை பெற்று, சட்டவிரோதமான முறையில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.
குறித்த சட்டவிரோத கஞ்சா விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில், பாரிய அளவில் ஆபத்தான போதைமருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் 42 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது மொத்தம் 118 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.




