Reading Time: < 1 minute

டொரோண்டோவில் இலவசமாக சைக்கிள்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள், மீளவும் மாநகரசபையால் கொண்டுவரப்பட்டுள்ளன.

Tamil Business Directory

அதன்படி, கடந்த புதன்கிழமை முதல் இம்மாதம் முழுவதும், ஒவ்வொரு புதன்கிழமையும், 30 நிமிடங்களுக்கு இலவசமாக சைக்கிள்களை பெற்றுக்கொள்ள முடியுமென, டொரோண்டோ நகரமுதல்வர் ஜோன் டோரி அறிவித்துள்ளார்.

டொரோண்டோவாசிகளை சைக்கிள்களை பயன்படுத்த ஊக்குவிப்பதற்கு, இந்நடவடிக்கை உதவுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

டொரோண்டோவில் இந்த ஆண்டு, 1.2 மில்லியன் பேர், மாநகரசபையின் சைக்கிள்களை வாடகைக்கு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.