Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நாளொன்றுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

Tamil Business Directory

இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 360பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 29பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 99,147பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8,175பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, 29,930பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 61,042பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 1,942பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.