Reading Time: < 1 minute
Tamil Business Directory
கொரோனா வைரஸ் தொற்றால் கனடாவில் முதல் உயிரிழப்புப் பதிவாகியுள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரி டொக்ரர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.
வடக்கு வன்கூவர் நேர்சிங் ஹோமில் வசித்து வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 80வயதான நபர் மூன்று நாட்களுக்கு முன்பு லின் வேலி பராமரிப்பு நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதனை உறுதி செய்திருந்தார்.
எனினும், கொரோனா வைரஸைக் குறைப்பதற்கு முன்னரே அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




