Reading Time: < 1 minute

பந்தைய விளையாட்டு முனையங்களை (கேமிங் கன்சோல்ஸ்) விற்க நடத்தும் சந்திப்புகளின் போது கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக, தொடர்ச்சியான அறிக்கைகளுக்குப் பிறகு பொது பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

விற்பனையாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி பொலிஸார் பொது பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

விற்பனையாளர்கள் சந்திப்பு பகுதிகளை கவனமாகத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகின்றார்கள். நீங்கள் எங்கு சந்திக்கிறீர்கள் என்பதை யாருக்காவது தெரியப்படுத்துங்கள் என்று ரொறன்ரோ பொலிஸார் கூறினர்.

சில கொள்ளைகளில் வன்முறை மற்றும் ஆயுதங்களும் அடங்கும். அபாயங்களைக் குறைக்க, நீங்கள் எப்போதும் ஒரு பொதுப் பகுதியில் சந்திக்கும்படியும் மேலும் நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரிடம் சொல்லுங்கள் என்றும் பொலிஸ்துறை பரிந்துரைக்கிறது.