Reading Time: < 1 minute

கனேடிய ஆயுதப்படையின் மூத்த அதிகாரிகள் இருவர் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

கடந்த 2016ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து, இராணுவ துறையினரால் குறித்த பாலியல் குற்றச்சாட்டுகள், முன்வைக்கப்பட்டுள்ளன.

35 வயதான லெப்டினன்ட் கேணல் தரத்தில் உள்ள அதிகாரி ஒருவர் மீது ஒரு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும், மாஸ்டர் வாரன்ட் தர அதிகாரி ஒருவர் மீது இரண்டு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், போதியளவு ஆதரங்கள் கிடைக்காமையால் விசாரணைகள் தள்ளி வைக்கப்பட்டதாக இராணுவக் துறைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளும் இராணுவ சட்டதிட்டங்களுக்கு ஏற்ப விசாரிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மற்றும் இராணுவ சட்டத்திட்டங்களுக்கு அமைய குறித்த அதிகாரிகளின், பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.