Reading Time: < 1 minute

கனடாவின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Business Directory

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவையில் தற்பொழுது அங்கம் வகிப்பவர்கள் எவரும் பதவியை விட்டு விலகப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு அமைச்சர்கள் தங்களது குடும்பம் மற்றும் சுகாதார காரணிகளின் அடிப்படையில் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொள்முதல் அமைச்சர் பிளோமினா டாஸீயின் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாஸீ, ஒன்றாரியோவின் ஹமில்டன் தொகுதியைச் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.