Reading Time: < 1 minute

செவ்வாய்க்கிழமை சீட்டிலுக்கப்பட்ட ‘லோட்டோ மேக்ஸ்’ (Lotto Max) லாட்டரியில், 75 மில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசை வென்ற நபர், தனது லாட்டரி சீட்டை பிரிட்டிஷ் கொலம்பியாவின் பென்டிக்டன் (Penticton) நகரில் கொள்வனவு செய்துள்ளார்.

Tamil Business Directory

33 மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பை, அந்த மர்ம நபர் சரியாக ஏழு எண்களையும் பொருத்தி தட்டிச் சென்றுள்ளார்.

அந்த வெற்றி எண்கள்: 3, 8, 15, 19, 23, 29 மற்றும் 37. பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்த நபர் தனது பரிசை உரிமை கோரும் வரை, அவர் எந்தக் கடையில் அந்தச் சீட்டை வாங்கினார் என்ற விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற நபர் தனது பரிசைப் பெற்றுக்கொள்ள 52 வாரங்கள் கால அவகாசம் உள்ளது.

இது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெல்லப்பட்ட மிகப்பெரிய பரிசுத் தொகை என்றாலும், இதுவே முதல் முறையல்ல. கடந்த ஆண்டு மே மாதம் சர்ரே (Surrey) பகுதியைச் சேர்ந்த ஒருவர் இதே லாட்டரியில் 80 மில்லியன் டொலர் வென்றதே இதுவரை அந்த மாகாணத்தின் சாதனையாக உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.