Financial Services Regulatory Authority of Ontario (FSRA) ஒன்டாரியோவில் அடமானத் தரகர்கள் மற்றும் காப்பீட்டுத் துறையில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்த தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
2024–25 நிதியாண்டில் மட்டும் விதிமீறல்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட சுமார் 53% அதிகரிப்பாகும்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 1.2 மில்லியன் டொலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 25-க்கும் மேற்பட்ட தரகர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, முன்னாள் காப்பீட்டு தரகர் Daniel Tiffin மீது உரிமம் இன்றி சட்டவிரோதமாக செயல்பட்டதற்காக $50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இல்லாத தரகர்கள் மூலம் காப்பீடு அல்லது அடமான சேவைகளைப் பெறுவது வாடிக்கையாளர்களுக்கு பெரிய நிதி இழப்புகளை ஏற்படுத்தும் என்று FSRA எச்சரித்துள்ளது.
நுகர்வோர் தங்களின் காப்பீட்டு அல்லது அடமான ஆலோசகர்கள் உரிய அனுமதி பெற்றவர்களா என்பதை FSRA இணையதளத்தில் உள்ள தேடல் வசதி மூலம் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கடுமையான நடவடிக்கைகளின் நோக்கம் மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களின் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் ஆகும் என FSRA நிர்வாக அதிகாரி Elissa Sinha தெரிவித்துள்ளார்.




