Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு ஒன்றில் மூன்று பேர் மர்மமான முறையில் மரணித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

வடக்கு கிழக்கு ஒன்றாரியோவின் ஹுட்சன் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வீடு ஒன்றில் இந்த மூன்று பேரும் சலனமற்று இருந்தார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலேயே இந்த மூன்று பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மூன்று பேரின் மரணம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

வார இறுதியில் இந்த மரணங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.

உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

இந்த மரணங்களினால் குறித்த பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றிய ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.