Reading Time: < 1 minute

கனடாவில் ஹமில்டன் பகுதியில் வாகனம் ஒன்று ரயிலில் மோதுண்டதில் பெண் ஒருவரும் சிறுமியும் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த சம்பவத்தில் இரண்டு வயதான சிறுமியும் பெண் ஒருவரும் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளான போது அருகில் இருந்தவர்கள் வாகனத்தில் சிக்கியிருந்த பெண் மற்றும் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமியும் குறித்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இந்த ரயில் பாதை கடவையில் நிலவி வரும் ஆபத்துக்கு குறித்து ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.