Reading Time: < 1 minute

கனடாவின் மிசிசாகா பகுதியில் உள்ள தங்களது வீட்டிற்குள் முதிய தம்பதி இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர்களது 46 வயது மகனைப் பீல் பிராந்திய காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

ஹுரொன்டாரியோ ஸ்ட்ரீட் மற்றும் லேக்ஷோர் ரோடு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தாக்குதல் சம்பவம் நடப்பதாகக் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ஒரு முதியவரையும் ஒரு பெண்ணையும் மீட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 71 வயதுடைய தம்பதியினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்த மறுத்துவிட்ட போதிலும், இந்தத் தாக்குதலுக்குத் துப்பாக்கி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில், உயிரிழந்த தம்பதியினரின் மகனான ஜோர்டான் சாங்வின் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். சந்தேக நபரான சாங்வினின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.