Reading Time: < 1 minute

கனடாவில் பணி செய்ய 45 நாட்களில் பணி விசா பெற்றுத்தருவதாக ஏமாற்றிய மோசடியாளர்கள் இருவர் மீது இந்தியாவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tamil Business Directory

லூதியானாவில் வாழும் குல்வீர் சிங் என்பவருக்கு, 45 நாட்களில் கனடா பணி விசா பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளனர் Davinder Singh Gill மற்றும் Kricpy Khaira என்னும் இருவர்.

அவர்கள் அளித்த உறுதியை நம்பி, தன் மருமகளையும் Québec Acceptance Certificate (CAQ) என்னும் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளார் குல்வீர் சிங்.

அதற்காக அவர் 4,33,600 ரூபாய் செலுத்தியுள்ளார். பின்னர் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. ஆகவே, பொலிசாரிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகாரளித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த இருவர் மீதும், ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.