Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் பணவீக்கம் மிகச் சிறிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் மாதம் பணவீக்கம் 6.8 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னைய ஒக்ரோபர் மாதம் பணவீக்கம் 6.9 வீதமாக காணப்பட்டது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மளிகைப் பொருட்களுக்கான விலை தொடர்ந்தும் உயர்வடைந்து செல்லும் நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் மளிகைப் பொருட்களுக்கான விலை 11.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்த காரணத்தினால் கனேடிய மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




