Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நாளொன்றுக்கு உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 757பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 222பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் கனடாவில் பதிவான அதிகூடிய உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இதற்கமைய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,947ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,295ஆக உளளது.

மேலும், 34,773பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 48,879பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,641பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.