Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நாணய குற்றிகளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

ரிச்மண்ட் அபர்தீன் நிலையத்தில் இந்த நாணயக் குற்றி விற்பனை நடைபெற்றுள்ளது.

வரையறுக்கப்பட்ட அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயக் குற்றிகளை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு மக்கள் காத்திருந்தனர்.

நாணய குற்றிகளை கொள்வனவு செய்ய அதிக கேள்வியை காணப்பட்டதனால் ஒருவருக்கு விற்பனை செய்யப்படும் நாணயக் குற்றிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாணய குற்றி விற்பனை செய்யும் நிலையம் திறப்பதற்கு ஐந்து மணித்தியாலங்கள் முன் இருந்தே மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமான நபர்களை நினைவு கூறும் வகையில் ஒன்று மற்றும் இரண்டு டொலர் நாணயக் குற்றிகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.