Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ Scarboroughவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

ரொறன்ரோவில் மதுபானசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு இரண்டு நபர்களால் நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.