Reading Time: < 1 minute

இந்தியாவிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜீத் சிங் (Harjit Singh Dhadda, 50), கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Mississauga நகரில் ட்ரக் சேவை நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார்.

இந்நிலையில், புதன்கிழமை தனது அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் அருகே சிங் நின்றுகொண்டிருக்கும்போது, அங்கு ஏற்கனவே கார் ஒன்றில் காத்திருந்த சிலர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள், அந்த நபர்கள் சிங்கை நோக்கி 15 முதல் 16 முறை சுட்டதாகவும், பின்னர் தாங்கள் வந்த காரிலேயே தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையில், சிங்குக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.