Reading Time: < 1 minute

கனடாவில் இரண்டு கைகளும் இல்லாத பெண் ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கடந்த ஏழு ஆண்டுகளாக குறித்த பெண் சட்ட ரீதியான போராட்டத்தை மேற்கொண்டு ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

ஒஸ்போர்ன் என்ற பெண்ணே இவ்வாறு ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த பெண் பிறக்கும் போது இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார் என்பதுடன் கால்களும் உயரம் குறைந்ததாக காணப்பட்டது.

மொன்றியாலில் பிறந்த ஒஸ்போர்ன் டொரன்டோவில் வளர்ந்தார் என்பதுடன் பின்னர் ஹமில்டனுக்கு குடி பெயர்ந்துள்ளார்.

பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒஸ்போர்ன், லாஸ் வேகாசில் வாழ்ந்து வருகின்றார்.

இரண்டு கைகளும் இல்லாத கால்களின் உயரமும் குறைந்த இந்த பெண்ணுக்கு செலுத்தக்கூடிய வகையிலான வாகனம் ஒன்றை விசேடமாக வடிவமைக்க வேண்டி இருந்தது.

இதற்காக சுமார் ஒரு லட்சம் டொலர்கள் தேவைப்பட்டது.

ஒஸ்போர்ன், ஏழு ஆண்டுகால கடின முயற்சியின் பின்னர் வாகனத்தை விசேடமாக வடிவமைத்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.