Reading Time: < 1 minute

கனடாவின் கல்கரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நோயாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

Tamil Business Directory

நான்கு நோயாளிகளை அவர் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த நோயாளிகள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளினிக் மருத்துவ சாலைக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

46 வயதான புஹு தொருங் வூ என்ற மருத்துவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை அறையில் வைத்து தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

அனுமதி இன்றி குறித்து மருத்துவர் பாலியல் சீண்டல்களை மேற்கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மருத்துவரின் மருத்துவ உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.