Reading Time: < 1 minute

கனடாவில் இந்திய மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

கனடிய புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் வெளிக்குணறப்பட்டுள்ளது.

கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் பொருத்தமற்ற வீடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும் எண்ணிகையிலான மாணவர்கள் இவ்வாறு மோசமான குடியிருப்புக்களில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 25 முதல் 63 வீதம் வரையிலான வெளிநாட்டு மாணவர்கள் தங்குமிட பிரச்சனைகளை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் பிறந்து உயர்கல்வியை தொடரும் கனடிய மாணவர்களுடன் ஒப்பீடு செய்யும் போது வெளிநாட்டு மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிலும் இந்திய மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.