Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற 65 வயதான புலம்பெயர் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கனடாவாழ் நபர் சுகயீனடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிற்சை பலனின்றி திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் மாதகலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார். கனடாவில் இருந்து தாயகம் திரும்பியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.




