Reading Time: < 1 minute

கனடாவில் சமீபத்தில் Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேறியது நினைவிருக்கலாம்.

Tamil Business Directory

அதைத் தொடர்ந்து, அதிக அளவில் கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி வருகிறார்கள் அமெரிக்கர்கள்!

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது.

இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ’Lost Canadians’ என்றே அழைக்கப்படுகிறார்கள்.

2009இல் அறிமுகமான இந்த விடயம், வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் அவர்கள் கனேடிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு தடையாக இருந்தது.

2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒன்ராறியோ உச்சநீதிமன்றம், இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கனடா அரசும், இந்த சட்டத்தின் விளைவுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க இயலாதவைதான் என ஒப்புக்கொண்டு ஒன்ராறியோ உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

இந்நிலையில், Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு மன்னர் சார்லஸ் சமீபத்தில் ஒப்புதலளித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள், அதிக அளவில் கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி வருகிறார்கள்.

அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 15க்கும் ஜனவரிக்கும் இடையில் மட்டும் 12,000க்கும் அதிகமான குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

அதில், ஜனவரி மாதத்தில் மட்டும் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களில் 2,500 பேர் அமெரிக்கர்கள் என்கிறது கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.

2025ஆம் ஆண்டில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமை என்னும் வகையில் கனடாவில் குடியுரிமை கோரியவர்கள் 82,500 பேர். அவர்களில், பெரும் எண்ணிக்கையிலானவர்கள், அதாவது, 24,500 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.