Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 516பேர் பாதிக்கப்பட்டதோடு, 83பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக இரண்டு இலட்சத்து 82ஆயிரத்து 577பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்து 768பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும், 45ஆயிரத்து 034பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 294பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 26ஆயிரத்து 775பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.