Reading Time: < 1 minute

கனடாவின் பியர்சன் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் டெல்லி நோக்கிப் புறப்பட்ட விமானமொன்று அவசரமாக மீண்டும் கனடா விமான நிலையம் திரும்பியுள்ளது.

Tamil Business Directory

எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று இவ்வாறு அவசரமாக திரும்பியுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு திரும்பியுள்ளது.

எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான AC042 என்ற விமானமே இவ்வாறு மீண்டும் கனடா திரும்பியுள்ளது.

விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் என்ஜின் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் ஒரு என்ஜினில் விமானத்தைச் செலுத்துவதற்கு விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.