Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவரை தாக்கிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
டொரன்டோ பொலிசார் குறித்த நபரை தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.
மெடோவ்வேல்வ் மற்றும் வேனிட்டா ஆகியவீதிகளுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கிய நபர் ஒரு சிறுமையை கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கருப்பு நிற ஹார்ட் சட்டையும் சிகப்பு நிற ஜாக்கெட் ஒன்றையும் குறித்த நபர் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.




