Reading Time: < 1 minute

கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி இன்று (14) பதவியேற்றுள்ளார்.

Tamil Business Directory

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அவரே லிபரல் கட்சியின் தற்போதைய தலைவராகவும் பதவி வகிக்கும் சுழலில், லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றிபெற்றார்.

இதையடுத்து, கனடாவின் 24ஆவது பிரதமராகவும் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி இன்று (14) பதவியேற்றுள்ளார்.

தற்போதுள்ள அமைச்சர்களையே மார்க் கார்னி தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் டொமினிக் லெப்லாங்க், வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி மற்றும் தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா பிலிப் ஷாம்பெயின் ஆகிய முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள் எனத் தெரிகிறது.