Reading Time: < 1 minute

இந்தியர் ஒருவர் கனடாவிலிருந்து குழந்தையுடன் நாடுகடத்தப்படும் நிலையில், குழந்தையைப் பிரிந்து வாழ்வது எப்படி என கண்ணீர் விட்டுக் கதறுகிறார் அவரது மனைவி.

Tamil Business Directory

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி சௌஹான். ரவியின் மனைவி இந்தியாவில் செவிலியராக பணியாற்றிவந்தார்.

அந்தப் பெண் தன் சொந்த ஊரில் தாக்கப்பட்டதாலும், மிரட்டுதலுக்குள்ளானதாலும் 2023ஆம் ஆண்டு கனடாவுக்குத் தபியோடி அங்கு அகதி நிலை கோரினார். 2024ஆம் ஆண்டு அவருக்கு அகதி நிலை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனைவியுடன் கனடா வந்த ரவி கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியலில் வாழ்ந்துவருகிறார். தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ரவியை அழைத்துள்ளார்கள் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள்.

வழக்கமான சோதனைதான் என எண்ணி மகனுடன் அங்கு சென்ற ரவியை நாடுகடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்துள்ளார் அவர்.

திங்கட்கிழமை ரவியும் அவரது மகனும் நாடுகடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்க, ரவியின் மனைவி, குழந்தையை பிரிந்து தன்னால் வாழ இயலாது என கண்ணீர் விட்டுக் கதறுகிறார்.

சிக்கல் என்னவென்றால், ரவியின் மனைவி இந்தியா திரும்பினால் அவரது உயிருக்கு ஆபத்து. அத்துடன், நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்காக காத்திருக்கும் அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல கனடா அனுமதிக்காது.