கனடாவில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் சுமார் 30 சதவீதம் கட்டுமான மற்றும் இடிப்பு பணிகளிலிருந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், Light House என்ற இலாப நோக்கற்ற நிறுவனம் 14 மாத முன்னோடி திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் Metro Vancouver பகுதியில் 38,000 கிலோகிராம் கட்டுமான பிளாஸ்டிக் கழிவுகள் குப்பை மேடுகளுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.
PNE Amphitheatre, Holdom Overpass மற்றும் Steveston Community Centre உள்ளிட்ட எட்டு கட்டுமான தளங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த முயற்சியின் கீழ், கட்டுமான தளங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, சிறு துண்டுகளாக அரைக்கப்பட்டு பின்னர் சிறுமணிகளாக (pellets) மாற்றப்பட்டன.
பின்னர், Delta பகுதியில் செயல்படும் Plascon Plastics நிறுவனம், அவற்றைப் பயன்படுத்தி ‘InfinaNet’ என்ற தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இது கான்கிரீட் பயன்பாட்டை குறைக்கும் ஒரு புதுமையான தீர்வாக கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் பணிப்பாளர் Gil Yaron தெரிவித்ததாவது, கழிவுகளை சரியாக பிரித்தெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பது தொழிலாளர்களுக்கு பெருமையை அளித்துள்ளது.
மேலும், இந்தத் திட்டம் செலவுக் குறைவாகவும் இலாபகரமாகவும் அமைந்ததால், பல ஒப்பந்ததாரர்கள் இதில் ஆர்வத்துடன் இணைந்துள்ளனர்.
எதிர்காலத்தில், இந்த முயற்சியை கனடாவின் பல நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.