Reading Time: < 1 minute

பிரம்டன் பகுதியில் காரை உடைத்து மர்ம இளைஞர்கள் நடத்திய கத்தி குத்து தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Business Directory

20 வயதிற்குட்பட்ட கருப்பு நிற தோற்றத்துடன் உள்ள ஒருவரை பொலிஸார் தேடிவருவதாகவும், இவர் குறித்து தகவல் தெரிந்தவர் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காஸில்மோர் மற்றும் கோர்வே டிரைவ் பகுதியில் உள்ள லேன் ப்ரூக் டிரைவில் நேற்று அதிகாலை 2:20 மணியளவில் நடைபெற்ற, கத்திக் குத்து சம்பவத்தின் போது 63 வயதான க்ளென்ஸ்பர்ட் ஆலிவர் என்பவர் காயமடைந்ததுடன், அவரது மகன் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார், முன்னெடுத்து வருகின்றனர்.