Reading Time: < 1 minute

ஒன்ராறியோ மாகாண சிறைச்சாலைகளில் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் தரவு பதிவு பிழைகள் காரணமாக, ஆண்டுதோறும் பல கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Business Directory

அரசு ஆவணங்களின்படி, 2021 முதல் 2024 வரை மொத்தம் சுமார் 118 கைதிகள் முறையற்ற வகையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 39 பேர் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளமை கவலைக்கிடமாக பார்க்கப்படுகிறது.

இந்தப் பிழைகள் பெரும்பாலும் சிறைச்சாலை நிர்வாக அலட்சியம் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறைச்சாலைகளில் அதிக நெரிசலும், பணியாளர் பற்றாக்குறையும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணங்களாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தச் சம்பவங்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என அரசு தரப்பு தெரிவித்துள்ள போதிலும், Doug Ford தலைமையிலான மாகாண அரசு தற்போது சிறைச்சாலை விரிவாக்கத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, ஒன்ராறியோ சிறைச்சாலைகள் தற்போது 130% க்கும் அதிக கொள்ளளவுடன் இயங்கி வருவது, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.