Reading Time: < 1 minute

ஈட்டோபிக்கோ பகுதியில் வைத்து 28 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tamil Business Directory

சம்பவம் தொடர்பாக மேலதிக விபரம் வெளியிட்டுள்ள பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும், ஒன்றுக்கு மேற்பட்டோர் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டிருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஒரு வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடுகள் எவையும் இல்லை என்பதையும், அவர் வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு அற்றவர் என்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜேம்ஸ்டவுண் கிறிஸ்செண்ட் மற்றும் ஜோன் கார்ல்லேண்ட் புளிவார்ட் பகுதியில் அமைந்துள்ள நகரான்மை குடியிருப்பு வளாகத்தினுள் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 12:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாரதூரமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர், ஃபார்ஹன் ஜமா என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஈட்டோபிக்கோ பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.